Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.684


தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

அறுபத்தொன்பதாம் அதிகாரம்.

சுத்த சன்மார்க்கம்.


4

எம்மதமுஞ் சம்மதமாய் ஏற்று நடந்தாலும்

அம்முதலை யொன்றார்க்கில் லை.

684


குறள் விளக்கம்


எந்த பரம்பொருள் எல்லாவற்றிற்கும் முதலாய் சச்சிதானந்தமாய் உள்ளதோ, அந்தப் பரம்பொருளைச் சத்விசாரத்தால் கண்டு கொண்டு அதன் மயமாகித் தயா வாழ்வு வாழாதவர்கள் பெறக்கூடிய பயன் யாதோ ?


அவர்கள் எந்த ஒரு மதத்தையோ அல்லது பன்மதத்தின் திரண்ட கொள்கைகளையோ மேற்கொண்டு பலர் மதிக்க வாழ்ந்தும், வள்ளற் பெருஞ்சோதியின் பேரருளைப் பெற்று பேரின்பமுறாது போய்விடுகின்றனர் அந்தோ !


மூவா முதல்வனையொன்றி ஓவா இன்பில் வாழ பூவார் மக்கள் யாவர்க்கும் இந்நெறியே நன்னெறியாம்.