தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபத்தொன்பதாம் அதிகாரம்.
சுத்த சன்மார்க்கம்.
|
2 |
புறத்தொரு மார்க்கம் புகுந்து செலநாம் பிறர்தமைப் பேணில் பிழைத்து. |
682 |
குறள் விளக்கம்
உலகியலில் வழங்குகின்ற புற மத நெறிகளின் ஒன்றைப் பற்றி நடப்போர் தம் மார்க்கமே நன்மார்க்கம் என்றும், தம்மவர்க்கே உய்வு பெற முதலுரிமை உண்டென்றும் கருதுவார்கள். அப்படிப்பட்டவர்கள் பிற மார்க்கத்தவரைக் குறை கூறாவிட்டாலும், தம் இனத்தவர் மீது காட்டும் பரிவு போல், காட்டி அன்பு செய்து வாழ்விக்காது தடைபட்டு நிற்பார்கள்.
தம் மதத்தைப் பற்றித் தாழ்வு மனப்பான்மையுடன். பிற மதத்தையும். அம்மதத்தவரையும் போற்றிக் கொண்டால், அவர்கள், தவறு செய்தவர்களே ஆவர். ஆதலின், இவர்கள் உலக மதச் சார்பாலோ, வெறுப்பாலோ அகிலமாம் அன்பு காட்டவும், ஒன்றான கடவுளின் ஒப்பற்ற திருவருளைப் பெறவும் கூடாது வீண் போவார்கள்.
Write a comment