Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.666.


தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.


அறுபத்தேழாம் அதிகாரம்


மருந்து.


6

மருத்துப் பொருளில் மருவிய ஆற்றல்

கருத்தன்கீழ் முந்திரி காண்.

666


குறள் விளக்கம்


மூலிகை முதலிய மருந்துச் சரக்குகளில் உள்ள சக்தி கடவுளரின் ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிற் சக்தியின் மிகச்சிறு கூறு பொருந்தியுள்ளதாம். இதனால், மக்கள், உலகில் உதித்து விருத்தியாகி இன்ப வாழ்வு அடைய இம்மருந்துப் பொருட்கள் துணையாய் உள்ளன.


உள்ளத்தே திருவருட் சக்தி நிலைத்து உயிர் விளக்க சக்தியைத் தந்தாலன்றி புறமருந்து எவ்வளவு ஆற்றல் வாய்ந்ததாய் இருந்தாலும் சிறிதும் பயன்படாது.


கருத்தன் கீழ் முந்திரி – என்பது கடவுட் சக்தியின் கீழ் அடங்கிய ஏகதேச முத்தொழில் ஆற்றலாம்.


எண்ணில் முந்திரி என்பது 1/320 ஆம். கீழ் முந்திரி என்பது (1/320 X 1/320) 1/102400 ஆம். இதனால் குறிக்கப்பட்டது கடவுட் சக்தியின் மிகச் சிறு கூறு என்பதே.