தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபத்தேழாம் அதிகாரம்
மருந்து.
|
5 |
அருளொளி கிட்டுமிங் கந்நொடி காறும் பொருள்மருந் தேற்க புவிக்கு. |
665 |
குறள் விளக்கம்
அருட் சோதியாகிய பெரு மருந்தைப் பெற்று பெருஞ்சுகம் உறுவது திண்ணம். ஆயினும் அதனை அனுபவ பூர்வமாய்ப் பெற்றுக் கொள்ளும் வரை, இவ்வுலகில் அன்பறிவு விளங்க வாழ்க்கை நடத்த வேண்டி, பல்வேறு பொருள்களையும் மருந்துகளையும் ஏற்க வேண்டியுள்ளோம்.
அல்
அப்படிச் செய்யாது, உலகப் பொருள் மருந்தை மறுத்து, இறையொளியை மட்டும் நினைந்து நினைந்து உள் ஒடுங்குவதால் ஏதும் பயன் உண்டாகாது.
Write a comment