தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபத்தேழாம் அதிகாரம்
மருந்து.
|
4 |
கற்பமுண்டு காயங் கழலாருங் காணாத அற்புதச் சோதிமருந் தன்பு. |
664 |
குறள் விளக்கம்.
தேகம் கெட்டழியாது பல காலம் நீடித்திருப்பதற்காகக் கற்ப மூலிகைகளை பக்குவமாய் உண்டு, காய சித்தி பெற்றுக் கொண்டவர்களும் கூட, திருவருளாலே அன்பொளியாம் அமிர்தத்தைப் பெற்றுக் கொள்ளாராயின், முடிவில் இப்பிறவிப் பெரும் பயனாம் பேரின்ப சித்திப் பெருவாழ்வு பெறாது ஒழிவர்.
மேற்படி அன்பொளி மருந்து ஒன்றே சுத்த பிரணவ ஞான தேக சித்திக்குரியது என்று தெரிந்து தெளிந்து அடைந்து ஆனந்த முறல் வேண்டும்.
Write a comment