தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபத்தேழாம் அதிகாரம்
மருந்து.
|
3 |
புலனுல கோங்கப் புதுநோய் மருந்தும் பலநூறா மில்லை பரம். |
663 |
குறள் விளக்கம்
ஐம்புலன் அவா மேலேட்டால் உலக போகங்களை அதிகமாகத் துய்க்கத் துய்க்க பலப்பலவாகிய புதுப் புதுப் பிணிகள் தோன்றி வாட்டும். அப்பிணிகளைப் போக்கப் புதிது புதிதாக மருந்துகள் பலவும் கண்டு பிடித்து வழங்கப்படும். ஆனால் இம்மருந்துகள் யாவும் ஏதோ ஓர் அளவு பயன் தரக்கூடுமே அல்லாது, நோய் முற்றுந் தவிர்த்து, பூரண சுகத்தையும் ஒப்பற்ற பேரின்பத்தையும் கொடுப்பனவல்ல.
Write a comment