Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.662


தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.


அறுபத்தேழாம் அதிகாரம்


மருந்து.


2

உண்டாற் பிணிதீர் உலகமருந் தெண்ணில்

கண்டாற் சுகந்தருமே கால்.

662


குறள் விளக்கம்


உலகத்திலே எண்ணரிய எத்தனையோ மருந்துகள் உள்ளன. அவற்றை நன்கு ஆய்ந்துமுறையாகப் பயன்படுத்திக் கொள்வதினால் எத்தனையோ பிணிகளை விலக்கிக் கொள்ளலாம். ஆனால் கடவுள் திருவடியைக் கண்டு பற்றிக் கொண்டாலே பெருஞ்சுக முறலாகும்.


அத்திருவடியைக் கண்டு கொள்ளும் வரை இத்த்டேக வாழ்வு தழைத்தோங்க வேண்டியுள்ளதால், உடல் நல வளர்ச்சிக்கு உணவும், உலக மருந்துகளும் தேவைப்படுகின்றன. திருவடி லட்சியத்தோடு உலகியலை மேற்கொண்டால் உடற்பிணியோடு உயிர்ப்பிணியாம் இறப்பையும் விலக்கி நித்திய சுகமுறலாகும்.

P Sujatha

தயவு திண்டுக்கல் சுவாமிகளே,
நீங்கள் சொல்லுவதை எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் திருவருள் உரையாக கேட்டு வருகிறோம். இறைவனின் திருவடியை பற்றி வாழுகிற பக்குவ மனதை எங்களுக்கு இறைவன் அருள வேண்டும்.இறைவா,உன் திருவடியை பற்றிய பிறகு மன துன்பங்களுக்கும் இருக்காது.உடல் துன்பங்களும் இருக்காது.மனமும்,உடலும் சீவ தயவில் ஒளிரும்.உலகியலில் உடல் வளர்ச்சிக்கு உண்ணும் உணவுகளும்,உடல் நோய்களிருந்து உடலை காப்பதற்கு உண்ணும் மருந்துகளும் உன் திருவடியை கண்டு அடைவதற்கே பயன் பட வேண்டும்.திருவடியை சாராது நாம் எந்த உணவு உண்டாலும்,மருந்துகள் சாப்பிடலும் பயன் இல்லை.உடலில் மருந்துகள் வேலை செய்யும் வரை உடல் நன்றாக இருக்கும்.திரும்ப மருந்து உன்ன வேண்டும்.ஆனால்,இறைவன் திருவடியை ஒரு முறை பற்றி கொண்டால் துன்பங்களே இல்லை.உண்மையாக திருவடியை பற்றி விட்டால் பயம் எதுவும் இல்லை.தயவை வழியாக கொண்டு திருவடியை பற்ற முற்படுவோம்.
Sunday, January 9, 2011 at 01:07 am by P Sujatha