தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா
அறுபத்தாறாம் அதிகாரம்
பொன்னாசை விலக்கு.
|
9. |
பொன்மணி யம்பலம் போதரா நம்மகத் தின்பளித் தோங்கு மிறை. |
659 |
குறள் விளக்கம்
என்றும் நமது அகத்தே இருந்து கொண்டு, நமக்கு வேண்டுவன வேண்டியாங்கு வழங்குவித்து, சுத்த இன்பத்தை வளர்க்கின்றது நம் கடவுள். இப்படி அக நின்று பேரின்பத்தை அளிக்கின்ற ஒரு பெருங்கடவுளைப் பொன்னாலும் மணியாலும் இழைத்து விளங்கும் புற அம்பலங்களில் எழுந்து அருள் செய்தல் வேண்டும் என்று எவ்வளவு காலம் தவம் செய்து வேண்டினாலும் ஆவதில்லை.
ஏனெனில், நம்பதி ஒருவரே என்றும், அவர் ஆன்மத் தளியில் அல்லாது பிறவிடத்தில் வெளிப்படார் என்றும், எல்லாம் வல்ல சச்சிதானந்தர் என்றும் அறியப்படலால், சுத்த தயா சோதி அம்பலத்தில் அல்லாது மற்ற இடத்தில் எழுந்தருளார் என்றும் அறிதல் வேண்டும்.
Write a comment