தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபத்தாறாம் அதிகாரம்.
பொன்னாசை விலக்கு.
|
8. |
வகரவித்தைக் காசை மனங்கொள்ளா சுத்த தகரவித்தை கற்றார் தயவு. |
658 |
குறள் விளக்கம்
வகர வித்தை – வாசி யோக சித்தியால் தொட்டதைத் தங்கமாக்கும் கலை, தகர வித்தை – தகராகாச வண்ணமாகி காய சித்தி பெற்று நெடுநாள் வாழும் கலை. இவைஇரண்டும் சித்த மார்க்கத்திற்கு உரியவை. யாவருக்கும் சித்திப்பது அருமை. சுத்த சன்மார்க்கத்திற்கு இவை குறிக்கோளல்ல.
சுத்த சன்மார்க்கம் மேற்கொள்ளுவோர், வகர வித்தையில் இச்சை வைத்துக் கெடார். கடவுள் தயவாலே தகர வித்தையை ஓதாதுணர்ந்து தயா வண்ண ஒளி உடம்பாக்கிக் கொண்டு கடவுட் பேரின்பில் களித்திருப்பார்கள்.
கற்று ஆர் தயவு = கற்றுணர்ந்து தயவு நிரம்பி விளக்குக என்றதாம்.
தயவு ஒன்றின்
மூலம் ஓதாது உணர்ந்தார் என்பதை இக்குறள் மூலம் வெளி படுத்தி உள்ளார்.
"ஓதாது உணர்ந்து ஒளி அளித்தே எனக்கு ஆதாரமாகிய அருட்பெருஞ்சோதி என வள்ளலார் அகவலில் சொல்லி இருப்பதை குறிப்பிடுவது இங்கு சிறப்பு
.உண்மையான கடவுள் நிலையை தயவினில் வழங்கி இருப்பதை அறிந்து உணரலாம்.
"சத்திய நிலைதனை தயவினில் தந்தனை" எவ்வளவு உயர்ந்த கடவுள் வாக்கியம்
.இதை வெளிபடுத்திய அகவலுக்கு திரு அகவல் என சொல்லி மேலும் எவ்வளவு சிறப்பு படுத்தினாலும் தீராது.தயவுடன்,அருள்ஜோதிசுஜாதா.