தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபத்தாறாம் அதிகாரம்.
பொன்னாசை விலக்கு.
|
5. |
பொன்னாசை யாலே புவியெல்லாம் பாழாக மன்னுயிர் போகுதே மாண்டு. |
655 |
குறள் விளக்கம்.
வாழ்கின்ற, நித்தியமாய் வாழ வேண்டிய மனிதன், சுத்த சன்மார்க்கத்தைக் கண்டு கொள்ளாததினால், பொன் மேல் இச்சை மிகுத்து, அதனாலே அழிவுறுகின்றான். இப்பொன்னாசையால் தான் கெடுவதன்றி, தன்னைச் சூழ்ந்த உலகையும் உயிர்களையும் பாழ் படுத்துகின்றான். இறைதரு பொன் பொருளைக் கொண்டு, இச்சையின்றி நுகர்ந்தால் இம்மையே யாவரும் நன்மையே உறுவர். சுத்த நெறியால் சுகப் பேரின்பமும் அடைவர்.
உலகையும்,பிற ஜீவன்களையும் துன்ப படுத்துவதோடு எங்களையும் துன்ப படுத்துகிறோம்.தயாபெரும் ஜோதியான கடவுளே உண்மை சன்மார்கத்தை நாங்கள் அகத்திலே கண்டு கொள்ள செய்து புறத்தே எங்கள் மூலம் நன்மையை அருளுவாய்.
தயவுடன்,அருள்ஜோதி சுஜாதா.