தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபத்தாறாம் அதிகாரம்.
பொன்னாசை விலக்கு.
|
3. |
விருப்பாற் குவிக்கா வெறுப்பாற் றவிர்க்கா அருட்டரு பொன்பொருள்கொண் டாளு. |
653 |
குறள் விளக்கம்
பேராசையால் பொன் பொருளை அதிகமாகப் பாடுபட்டு சேகரித்து குவித்து வைக்காமலும், அவற்றினிடத்து வெறுப்பு கொண்டு தீண்டாது விலகிச் சென்று வாடாமலும், கடவுளின் தயாநியதியாலும், நம் கருணை நன்முயற்சியாலும், கிடைக்கப் பெறுகின்ற பொன், பொருள் முதலியவற்றைக் கொண்டு உலகியலில் அருட் செயல் விளங்க வாழ்வதுவே மெய் இன்புறு நெறியாகும். பொன்னாசை இன்றி உலகியல் வாழ்வு மேற்கொள்வதால் அதனிடத்து விருப்பு வெறுப்பு உண்டாவதில்லை. அப்படிக் கையாள்வதால் உலகில் நற்பயனே ஓங்கும்
Write a comment