Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.652.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.


அறுபத்தாறாம் அதிகாரம்.


பொன்னாசை விலக்கு.


2.

பொன்செய் பொருளெல்லாம் போறா தருட்பணிக்கே

இன்புசெய் தீந்திங் கிரு

652


குறள் விளக்கம்


பொன் பொருளினிடத்து அதிகப் பற்று வைத்து, மகிழ்கின்ற மனோ இச்சை மாசு உடையதாம். இதனால் அப்பொருள் முதலியவற்றைத் தனக்காகத் திரட்டி வைத்து மகிழ்வது அறியாமை. அவற்றைப் பிற உயிர்க்கு இன்பு செய்யவே அன்போடளித்து, அவ்வருட் பணியால் அகமிக மகிழ்தல் உண்மை இன்பமாகும்.


உலகப் பொருளெல்லாம், பொன், பணம், ஒன்றினாலே பெறப்படுவதால் அப்பணம் படைத்தோர், அஃதில்லாது வறுமையால் வாடுபவர்களுக்கு தக்க முறையில் வழங்கி வாழ்விப்பது அருளின்பச் செயலாகும்.