தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபத்தைந்தாம் அதிகாரம்.
பெண்ணாசை விலக்கு
|
10 |
தயாசெயலே ஐம்புலத்திற் சார்ந்து வர நேரில் மடாலறு மின்புண்டாம் வாழ்வு. |
650 |
குறள் விளக்கம்
உண்மைத் தயவு வெளிப்படாத போது, புல போக இன்பம் எல்லாம் மயக்கில் தொன்றி மறைவதே அல்லாது, மன்னி நின்று வாழ்வளிப்பதன்று. அத்தயவு பூரணமாய்ச் செயல்படுகின்ற போது பெரிய தயா இன்பானுபவமே ஐம்புலத்தாறாக ஏற்கப்படுகின்றதாம்.
ஆகையால் புலனின்பத்தில் ஆசை வைத்துத் துய்த்து அழிவதும், புலனடக்கி அழித்துத் துறப்பதும் செய்யாது, நம் தயா நிதி அளித்த மெய்யறிவு விளங்கும் பொறி உடம்பில் தயா ஒளி நிரம்ப தினமும் வாழ்ந்து பேரின்பில் திகழ்வது திருவருளாணையாம்.
Write a comment