Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.648.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.



அறுபத்தைந்தாம் அதிகாரம்.


பெண்ணாசை விலக்கு


8.

மொழிமுதலா நற்கலையால் முன்னவனைக் காண

விழிதிறத்தல் மேலோர் விழைவு.

648


குறள் விளக்கம்


மனிதன் உயர் அறிவும், அதனை வெளியிட்டு விளக்கிக் கூறவல்ல பேசும் ஆற்றலும் பெற்றுள்ளான். இவற்றால் கடவுளைக் கண்டு, அருளடைந்து, அழியா இன்ப வாழ்வு பெறுவதற்கே மொழி முதலான சகல கலைகளையும் ஆக்கி அளித்துள்ளனர் வல்லவர்கள். அவர்கள் திருவுள்ளமும் ஆண்டவர் ஆணையும் அப்படி இருக்க, உண்மையைக் காணாது, அறிவுக் கண் மூடி புலனின்பம் தரும் (பெண்ணாசையை வளர்க்கும்) புறக்கலை வாழ்வால் என்னோ பயன் ?