தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபத்தைந்தாம் அதிகாரம்.
பெண்ணாசை விலக்கு
|
7. |
மருவுபெண் ணாசை மறக்கவே வெண்டும் கரகுபுலத் திச்சையது காண். |
647 |
குறள் விளக்கம்
ஐம்புலத்தவாவே பெண்ணாசையாக உள்ளதால், இதனால் புலன் மயங்கி, பொறி கலங்கி, உட்கருகிக் கெடுவது இப்பெண்ணாசையின் விளைவாகும். ஆதலால் ஆண் பெண் இரு பான் மக்களும் இப்புலனின்பத்தில் அவா மிகக் கொள்ளக் கூடாது. தயாவியல் வாழ்வின் பொருட்டு இச்சையின்றி பொருந்தி வாழ்ந்திடல் வேண்டும்.
மனிதனுக்கு பொறி உடம்பு பெண் கூறாயும். ஆன்ம வடிவம் ஆண் கூறாயும் உள்ளதால், ஆன்மானுபவம் பெற, புலனிச்சையாம் பெண்ணாசையை விலக்க வேந்தும் என்பது யாவருக்கும் பொருந்துவதேயாம்.
இக்கருத்தில்தான், திருவருட் பிரகாச வள்ளலாரும் “மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்”. என்று தேற்றங் கொடுத்து வேண்டிக் கொள்ளுகின்றார் தெய்வ மணிமாலையில்.
Write a comment