Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.638.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

அறுபத்து நான்காம் அதிகாரம்.

மண்ணாசை விலக்கு.

8.

விழிநிலைக்கண் மண்ணாசை விட்டுள் தயவாற்

பழகிடு ஒட்டிவாழ் பண்பு.

638


குறள் விளக்கம்


தேகப்பற்று அறுவதற்கு, அகதே அருளாற் கூடி வாழப் பழகுதல் வேண்டும். இப்பழக்கம் அதிகரிக்க அதிகரிக்க மண்ணாசை படிப்படியாக அழிகின்றதாம். இப்பண்பு பெருகிப் பேரின்பானுபவம் உறுவதற்கு நமது விழிப்பு நிலையின் கண் முயன்றடைதல் வேண்டும்.


இச்சாக்கிர அனுபவம் பெற்றிருந்தால், இதுவே, கனவு நிலையிலும், தேகத்தை முற்றும் மறந்திடும் நல்ல தூக்கமாகிய சுழுத்தி நிலையிலும் அக உண்மையின் அனுபவமாய் விளைந்து பெருகுகின்றதாம். பின் உலகிடை வாழ்ந்திடும் போதும் புறத்தேக இருப்பு உணரப்படுவதில்லை.