Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.637.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.


அறுபத்து நான்காம் அதிகாரம்.


மண்ணாசை விலக்கு.


7.

பிறபுற வாழ்சரிதை பேணேல் தயவே

உறவுற வேண்டு முளத்து.

637


குறள் விளக்கம்.


அகத்தே தயா சோதியினைக் கண்டு, அதன் சம்பந்தத்தால் அழியா இன்ப வாழ்வு பெற வேண்டியுள்ளோம். ஆதலின், பிறரைப் பற்றியும். அவரது புற வாழ்க்கைச் சரித்திரங்களைப் பற்றியும் பற்று வைத்துப் போற்றிக் களித்தல் முறையன்று.


ஒருவரது பிறப்பு, வாழ்வு, இறப்பு நாட்களைக் குறித்து விசேட வைபவ விழாக்கள் கொண்டாடுவது எல்லாம். புறத்தோற்ற மண் தேகப் பற்றினால் விளைவனவேயாம். அகத்தில் தயா விளக்கம் உண்டாவதற்காகவே பிறரைப் பற்றிய சிற்சில குறிப்புகள் அறிந்து கொண்டால் போதுமானவை.