Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.633.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.


அறுபத்து நான்காம் அதிகாரம்.


மண்ணாசை விலக்கு.


3

நிலமனை மீதவா நீங்கிவாழ்ந் தாலும்

மலமனைத் தேகுமோ மற்று.

633


குறள் விளக்கம்


இவ்வுலகில் மண்ணாசை என்பது, பூமி, வீடு, வாசல் முதலியவற்றின் மேல் அவா என்று கருதுகின்றனர். இவ்வாசையை ஒழிப்பதற்கு அவற்றை விட்டு விலகியேனும், அவற்றின் மேல் உரிமை கொள்ளாது பொருந்தியேனும் வாழ்வதால் அம் மண்ணாசை நீங்கி விட்டதாக நினைப்பது சரியல்ல. இவ்வவா நீக்கத்தால், மலமொழிந்து பந்தம் அழிந்து முத்தி சித்திப்பதில்லை.


அக ஒளியைப் பற்றிக் கொண்டு, மண்ணான உடற்பற்றற்று வாழ்வதே உண்மையான மண்ணாசை நீங்கிய வாழ்வாம்.