தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபத்து மூன்றாம் அதிகாரம்.
உலகந் துறவாமை.
அம்புவி = எழில் வளர் உலகம்.
கடவுள் இயற்கை, இவ்வெழில் வளர்க்க, அதனை நாமும் தயவால் வளர்த்து இன்புறுவதுதானே முறை.
|
9 |
உள்ளத் துறவே உயர்துறவு மற்றவகை எள்ளித் துறத்தல் இழிவு. |
629 |
குறள் விளக்கம்
அகத்தே நிராசை உண்டாகிப் பற்றற்று இருந்து, உலகில் தயா இன்ப வாழ்வு நடத்தலே உண்மைத் துறவாகும். சுத்த சன்மார்க்கத்து உத்தமர்க்கு இவ்வுள்ளத் துறவு உரித்தாகும்.
இவர்கள் உலகத்தை உலக வாழ்வை அலட்சியம் செய்து பழிகூறித் துறந்து சென்று தாழ்வற்று அறியார்கள். மற்ற புறத் துறவு பூண்டவர்கள், அக மெய்ப் பொருளைப் பற்றிக்கொள்ளாதவர்கள் திருவருளாணையை மறந்து செற்னு இழிவுற்று வீண் போகின்றார்கள்.
Write a comment