Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.627

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

அறுபத்து மூன்றாம் அதிகாரம்.

உலகந் துறவாமை.

7

ஓடாது நன்னெறி யூடாது அம்புவிமேல்

வாடாது அன்பு வளர்.

627

குறள் விளக்கம்

திருவருள் அளித்துள்ள உலக வாழ்வை வெறுத்து, விட்டோடாது, சன்மார்க்கத்தினின்று பிணங்காது, தயா பெருக்கிக் கொண்டிருத்தல் வேண்டும். விருப்பு வெறுப்பின்றி, உள மகிழ்வோடு தயை வளக்கவே நமக்கு உலக வாழ்வு வழங்கப்பட்டுள்ளோம். ஆதலின், வற்றி வதங்கி வாடி மடியும் துறவு நெறியைப் போற்றிக் கொள்வது சன்மார்க்கமாகாது.

அம்புவி = எழில் வளர் உலகம்.


கடவுள் இயற்கை, இவ்வெழில் வளர்க்க, அதனை நாமும் தயவால் வளர்த்து இன்புறுவதுதானே முறை.