Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.623.


தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

அறுபத்து மூன்றாம் அதிகாரம்.

உலகந் துறவாமை.

3

வாழப் பிறந்த மனிதனே ஏற்கதயை

தாழத் துறத்தலே சாவு.

623

குறள் விளக்கம்

ஏ ! உயரறிவு படைத்த சிறந்த பிறப்பெய்தி உள்ள மனிதா, நீ திருவருளை அடைந்து, உலகை விட்டு நீங்காது என்றென்றும் வாழப் பிறந்துள்ளாய் என்பதை உணர்வாயாக.

இவ்வுண்மையை உணராது. உலகையும் அதில் புரிய வேண்டிய தயவுப் பணியையும் துறந்து.விலகி நின்று தாழ்வுற்று வீழ்தல் இறப்பாகும். இது, உலகியலுக்கும் அருளியலுக்கும் பொருந்தாது. இன்ப வாழ்வுக்குத் தடையாகும். ஆதலால், சுத்த தயா சன்மார்க்கத்தால் இன்ப வாழ்வு பெறுவாயாக.