தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபத்திரண்டாம் அதிகாரம்.
பணிவு.
|
10. |
பணிவின்றா லின்று பகைபோரும் பாரைப் பிணிகொண் டழிக்குதே பீடு. |
620. |
குறள் விளக்கம்
உலகில் பெருவாழ்வும், நலனும் இன்பமும் ஓங்க, உள்ளத்தில் தயவும், புற வாழ்க்கையில் பணிவும் தோன்ற வேண்டியுள்ளன. மேற்படி பணிவு இன்று உலக வாழ்வில் வெளிப்படாததினால், பகையும் போரும் பெருகி, மக்களை வாட்டி வதைத்துத் துன்புறுத்திப் பாழ்படுத்துகின்றன. மக்கட் பிறப்பின் பீடு (பெருமை) எல்லாம் கெட்டு மண்ணாகின்றது.
ஆதலின், இச்சன்மார்க்க இன்ப நெறிக்கு உளங்கனிந்த பணிவு வாழ்க்கை இன்று எவ்வளவு இன்றியமையாதது என்று அறிந்து கொள்ளுகின்றோம்.
Write a comment