தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபத்திரண்டாம் அதிகாரம்.
பணிவு.
|
9. |
தான்கெட் டவர்க்குந் தயைசெய்தல் மெய்ப்பணிவு மான் தெண்டனாமோ வணக்கு. |
619. |
குறள் விளக்கம்
பணிவு என்பது வணக்கம் என்று வாயினால் சொல்வதுவும், கரம் குவித்துச் சிரம் தாழ்த்தி நிற்பதுவும். அடி வீழ்ந்து தெண்டனிடுவதுவும் ஆகிய இச்செயல்கள் மட்டுமோ ? அன்று.
தான் என்ற தற்போத உணர்ச்சி அழிய அகமுருகி அருட்பெருக்கால் அன்பொடு பணிதலே உண்மையான பணிவாகும். இந்நிலையினின்று தயவுப்பணி செய்கின்ற போது வாழ்த்துவதும் வணங்குவதும் உடன் அமையும்.
மான் = மால் = பெருமை, மயக்கம்.
மான்தெண்டன் என்றது, பெருமையாகத் தோற்றுகின்ற புறப்பணிவு. மயங்கிய நிலையில் செய்யும் வணக்கம்.
Write a comment