தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபத்திரண்டாம் அதிகாரம்.
பணிவு.
|
6. |
வீரியம் பேசி வெகுண்டு பகைகொள்ளா காரியம் நற்பணிவிற் காண். |
616. |
குறள் விளக்கம்
பணிவின்றி படபடப்போடு கடிந்து கொள்வதால், எக்காரியமும் இனிது கைகூடுவதில்லை. ஆகையால், நல்ல பணிவோடு, பிறர் மேல் கோபமும், விரோதமும் காட்டாது, சன்மார்க்க நெறியினின்று பிறழாது நமக்கு ஆக வேண்டிய காரியத்தைப் புரிந்தால், அது எளிதில் நல்ல முறையில் முடியும். உயரின்பமும் நல்கும். “கூரம்பாயினும் வீரியம் பேசேல்” என்பது ஔவைத் திருவாக்கு.
Write a comment