Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.615.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

அறுபத்திரண்டாம் அதிகாரம்.

பணிவு.

5.

துணிந்துரைத்தல் வேந்துந் துலங்கா துழல்வோர்

தணிந்திட அன்பு தழைத்து.

615.

குறள் விளக்கம்

சொல்லிலும், செயலிலும் பணிவு இருத்தல் வேண்டும். என்றாலும் கண்ட உண்மையைப் பற்றி நின்று, பிறர் தெரிந்து கொள்ளும்படி எடுத்துரைத்தல் வேண்டும். திண்ணிய உள்ளத்தார்க்கே எண்ணிய எண்ணியாங்கு எய்திடலாகும்.

புன்னெறியில் சென்று திரிபவர்கள், தயா நன்னெறியால் பணிவு உண்டாகி,. உள்ளொளி தழைத்தற்பொருட்டு, பக்குவப்பட்ட நல்ல உள்ளம் படைத்தோர்க்கு மெய்ப்பொருள் வழங்குதல் வேண்டும் நாம்.