தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபத்திரண்டாம் அதிகாரம்.
பணிவு.
|
1. |
தொண்டர்க்குத் தொண்டனாத் தொண்டுசெயு மாலிறை அன்பர்க்கு அன்புசெய அண்டு. |
611. |
குறள் விளக்கம்
உண்மையான பக்தித் தோத்திரம் செய்வதால் கடவுளிடத்தில் பற்றும், சீவர்களிடத்தில் பணிந்து அன்பு செய்யும் பணிவும் உண்டாகும். இதனால், பக்தித் தோத்திரத்திற்கு அடுத்த படியாக இப்பணிவு என்னும் அதிகாரம் வைக்கப்பட்டது.
இறைவன் தன் பக்தர்கட்கு வேண்டுவன எல்லாம் உவந்தளித்து மகிழ்விக்கின்றான். அடியார்க்கு அடியானாய்ப் பணிந்து உதவுகின்ற கடவுள் தன்மையை நினைக்கும்போது நமது அகங்காரம் ஒழிந்து நாமும் பிற உயிர்க்குப் பணிந்தன்பு செய்ய முற்படுவோம்.
கடவுள் தயவுடையோர்க்கே, அக்கடவுளும் அருள் மிகச் செய்தல் போல், மெய்யன்புடையார்க்கே நாம் பணி விடை செய்தல் வேண்டும். பிறர் மீது உள்ள நெகிழ்ச்சியோடு இரக்கங் கொண்டிருந்தால் யாவரிடத்தும் பணிவு உண்டாகும்.