Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.609.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

அறுபத்தோராம் அதிகாரம்

பத்தித் தோத்திரம்.


9.

இசைக்கருவி கொண்ட திறையென்ப சோதி

மிசைத்தா மனுபவ மேற்று.

609

குறள் விளக்கம்

பிரணவ நாத மய உலக தோற்றத்திற்கு ஆதாரமாய் உள்ளது அணுவகக் கடவுட் சக்தியாகும். இது எல்லாம் வல்ல அருளொளி மயமாக உள்ளதாம்.

இவ்விறையொளி அனுபவம் பெறுவத்ற்காகப் புறத்தே நாதப் பிரம்ம அனுபவத்தை வழங்கும் பலவகை இசைக் கருவிகளை அமைத்து, ஓர் ஒரு கற்பனைத் திருவுருவின் கரத்தில் காட்டியுள்ளனர் ஆன்றோர். உடுக்கு, சங்கு, குழல், வீணை, யாழ் முதலியன சிவன், மால், கலைமகள், நாரதர் முதலானவர்களுக்குத் தந்துள்ளனர். கருவி கானத்தொடு கலந்த பக்தி தோத்திரம், மனிதனுக்கு மனோலயம் அளித்து கடவுட் சோதியில் ஒன்ற வைக்கும் என்பது மேலோர் கருத்தாம்.