Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.600.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

அறுபதாம் அதிகாரம்.

வீட்டுக்குரியோர்.


10

அகவிலத்தார்க் கைந்திணை யாறுபொய் யாகும்

இகவிலக்க ணத்துறை யேச்சு.

600

குறள் விளக்கம்.

அக இல்லத்திலே இரண்டற இருக்கும் இயல்பறிந்து, அருளானந்த அனுபவம் பெறுபவர்கள், புற உலகத்தவர்கள் போன்று, இரங்கல், இருத்தல், ஊடல், பிரிதல், கூடல் என்னும் ஐந்திணை அனுபவத்தைப் பொருந்தார்கள், அக நிலையிலிருந்தே அவ்வைந்திணை அனுபவத்தையும் அருளால் பெறுவதற்கே பத்தித் தோத்திர தயவுச் செய்கைகளால் வாழ்வார்கள்.

இக இல்லத்தின் கண் வாழ்பவர்களுக்கு மேற்படி ஐந்திணைத் துறை வாழ்வு, புறப்புலலின்ப மீந்து பொன்றுவதாகும். ஆகவே, உண்மையான அகப் பொருளின்பம் சுத்த சன்மார்க்கத்தால் பெறுவதன்றி, உலகியல் இலக்கணம் குறித்த நெறியால் ஏமாற்றமே உண்டாகும் என்று அறிதல் வேண்டும்.