Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.593.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

அறுபதாம் அதிகாரம்.

வீட்டுக்குரியோர்.

3.

எல்லார்க்குஞ் சொந்தம் இறைவனவ னில்லமும்

எல்லார்க்குஞ் சொந்தமா மே.

593

குறள் விளக்கம்

நமது பதியாகிய கடவுள் எல்லாருக்கும் உரியவராவர். ஆதலின், அவர் நித்தியமாய் உறைகின்ற ஆன்மாவாகிய இல்லமும் யாவருக்கும் உரிமையேயாம். பக்குவம் வரும்போது யாவரும் நம் பதி இல்லத்தை உரிமையாகச் சொந்தமாகப் பெறுவது திண்ணம்.