Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.587.




தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பத்தொன்பதாம் அதிகாரம்.

தயா இன்பம்.


7.

தானற் றுயிர்க்கின்பம் தந்திருப்பார்க் காமின்பம்

வானத் திணையாம் மலர்ந்து.

587

குறள் விளக்கம்

தயவாலே, தான் என்ற அகங்காரம் ஒழிந்து, அகப் பெரும் பதியின் அனகச் செயலாய் பிறர்க்கு இன்பம் செய்து கொண்டு இருப்பதால் உண்டாகும் அக மகிழ்ச்சிக்கும் எல்லை உண்டோ ? அவ் இன்ப உணர்வு மலர்ந்து, அருள் மணத்தை அண்ட வெளியெல்லாம் நிறைத்தலால், அவ்வளவு கடந்த எல்லையை உடையது இப்பேரின்ப அனுபவமாம்.

பேரின்ப சொரூபமாக உள்ள அகப் பெரும் பதியோடு இரண்டறக் கலந்து கொண்டு அனக வாழ்வு நடத்த உண்மை இன்பம் பெருகுகின்றதாம்.