Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.585.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பத்தொன்பதாம் அதிகாரம்.

தயா இன்பம்.


5.

அருளறியா இன்பம் அகமயக்க மாகும்

பொருளறியா போக்கீர் புலன்.

585

குறள் விளக்கம்

அக உண்மையைத் தெரிந்து கொள்ளாது, அருள் உணர்வைப் பெறாது துய்க்கின்ற இன்பமெல்லாம் மயக்கமே. அவை யாவும் அனுபவிக்கின்றவரை இன்பம் போல் இருந்து பின்னர் மறைந்தொழிவதால் துன்பமே உண்டாம்.

ஆதலால், இன்பம் என்பது இன்னதென்று உள்ளவாறு அறிந்து கொள்ள வேண்டியது முதற்காரியம். இதற்கு தயா நெறியில் பயின்றால்தான் விளங்கும். மெய்ப்பொருள் புலனாகும். பொய் இன்பத்தில் ஆவற்புலனைச் செலுத்தாது அக இன்ப அனுபவத்தில் ஓங்கலாம்.