Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.583.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பத்தொன்பதாம் அதிகாரம்.

தயா இன்பம்.

3.

அகநிலை நின்று அருளொடு வாழுஞ்

சுகநிலை பேரின்பத் துறை

583

குறள் விளக்கம்.

சுத்த மனத்தில் அருள் உணர்வு தோன்றி ஆன்மத் தொடர்புற்று நெகிழ்ந்து வெளிப்படுதல் வேண்டும். இது கொண்டு உலகில் வாழ வாழ அகத்தே மலர்ந்த அவ்வருள் உணர்வு நம்மில் பெருகி நிரம்புவதாம். இந்நிறைவால் தேகம் சுக வடிவமாகி நிலை பெறும். இம்மார்க்கமே பேரின்பத்துறையாக அமைவது.

அருள் அறியா மருள் வாழ்வில் தழைப்பது சிறு இன்பமாகிய புலன் மயக்கமேயாம். அந்நிலையில் பேரின்பத் துறை அறிவரியதாம்.