Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.581.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

மூன்றாம் பிரிவு.

இன்ப இயல்.

ஐம்பத்தொன்பதாம் அதிகாரம்.

தயா இன்பம்.



1.

சுத்த தயாவாழ்வில் தோன்றுவ தின்பம்மற்

றத்தனையும் பொய்யா மழிந்து.

581

குறள் விளக்கம்

தயா ஒழுக்கத்தாலும், தயா விசாரத்தாலும் பண்பட்ட மனிதன் உலகியலில் தயா இன்ப வாழ்வு வாழ வேண்டியுள்ளான். ஆதலின் அவ்விரண்டு இயல்களுக்குப் பின் இவ்வியல் தொடர்கின்றது. அவ்வின்பத்தும் முதலில் உண்மையான இன்பம் எது என்பது குறித்து விளக்க வேண்டி. அது இத் தயா இன்பம் என்பதாக இவ்வதிகார முகத்தால் தொகுத்துரைக்கப் பட்டுள்ளதாம்.

சுத்த தயா வாழ்வில் உண்டாகின்ற இன்பமே இன்பம். இது, புல போகப் பற்றற்று அகம் ஒன்றிய விசாரத்தால் தயாவாழ்வு மேற்கொள்ளும் போது உண்டாகின்ற இன்ப அனுபவமாம். இதுவே சுத்த இன்பம். மற்ற அவா மனத்தில் புலனின்பமாய் தழைப்பதெல்லாம் அசுத்த இன்பமாம். அது அநித்தியம். அழிந்து போகும்.

“அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்

புறத்த புகழு மில” என்பது பொய்யா மொழி.