Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.578.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பத்தெட்டாம் அதிகாரம்.

விசார சங்கற்பம்.


8

நல்லொழுக்கம் ஞானம் நழுவா விசாரத்தோ

டுள்ளொருங்கல் சங்கற்ப யோகு.

578

குறள் விளக்கம்.

அகத்தே அத்துவைத அனுபவம் பெறுவதுவே சங்கற்பம் என்னும் யோகமாம். இவ்வக அனுபவத்திற்குத் தயா நல்லொழுக்கமும், உண்மை நிலை பிறழாத் தயா சத்விசாரமும் பழகுதல் வேண்டும். மேற்படி விசார சங்கற்பத்தால் உள் ஒடுங்கி விடாது, உள்ளே ஒன்று பட்டு, உலகியல் துறவா சகசானுபவம் பெறுதல் வேண்டும் என்பது குறிப்பு.