Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.576.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பத்தெட்டாம் அதிகாரம்.

விசார சங்கற்பம்.


6

பகரான்ம பீடத்தே பற்றுவைத்துக் கற்ற

சகரநிலை சங்கற்பச் சார்பு.

576

குறள் விளக்கம்

சங்கற்பம் என்ற சொல், சம்+கல்+பம் என்னும் முந்நிலை கொண்டதாம். இவற்றின் விளக்கம்; 1. சம் = சத்தாகிய கடவுட் சோதி, 2. கல் = சித்து என்னும் ஞானமாகிய மெய்யறிவு விளக்கம் வெளிப்படுதல்; 3. பம் = பகர வடிவ பீடத்தில் ஆன்மானுபவம் ஆனந்தமாகத் திகழ்வது. ஆகவே, ஆன்ம நிலையத்து கற்பதினால் அடையப் பெறுகின்ற கடவுட் சோதி அனுபவமே சங்கற்ப வடிவு கொண்டு இலங்குகின்றதாம்.

பகர ஆன்ம பீடம் என்பதற்கு, பகரப்படுகின்ற அல்லது புகழ்ந்துரைக்கப்படுகின்ற ஆன்ம இருக்கையுமாம்.