தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
ஐம்பத்தெட்டாம் அதிகாரம்.
விசார சங்கற்பம்.
|
3 |
சச்சிதா னந்தபதி தானேநா மென்றவொரு நிச்சய மாறா நினை. |
573 |
குறள் விளக்கம்
கடவுள், சத்து சித்து ஆனந்தமாகி – அதுவே நாமாகி இரண்டற்று ஒன்றி உள்ளதே உண்மை. இதனை உணர்ந்து உறுதியாக உட்கொண்டு, இவ்வெண்ணம் மாறாது. மறந்து போகாது நிற்பது தான் சங்கற்பம்.
ஜீவ தேக மனோ கரண அபக்குவத்தால் நமது உண்மை நிலையாம் கடவுள் இயல் அறியப்படாது இருந்தவரை மறைந்திருந்த ஒன்று, பக்குவ வசத்தால் இது சமயம் வெளிப்படுகின்றது. சத் விசாரத்தால் இவ்வுண்மையைப் பற்றி, நிலைத்திருத்தல் ஒன்றே உண்மைச் சங்கற்பம் ஆகின்றது.
Write a comment