Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.569.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பத்தேழாம் அதிகாரம்.

ஞாபக விசாரம்.


9

வான்வந்த நான்கில் வருங்குறை வாக்குலகில்

ஊன்றந்த ஞாபகமில் யோகு.

569


குறள் விளக்கம்


விண்ணினின்று காற்றும், தீயும், நீரும் மண்ணும் தோன்றி இவ்வுலகமாகி விளங்குகின்றதாம். வானிற் கலந்த மற்ற இந்நான்கு பூதங்களில் ஒன்று இல்லையாயினும் இவ்வுலகம் தோன்றி விளங்க முடியாது.


இதே போன்று, இம்மனிதப் பிறப்பால் உளப்பண்பாடு எய்தி, சத்விசாரத்தால் கடவுள் உண்மையை அறிந்து, நால்வண்ணம் பொருந்திய பூர்ண யோகத்தால் பேரின்ப சித்தி பெற வேண்டியுள்ளோம். இந்நாட்பாத யோகத்தில் ஒரு கூறு இன்றேனும் யோகம் கூடுவதில்லை.


சக மார்க்கத்தார் கூறும் தனித்தனி ஒவ்வொரு யோகத்தாலும், கடவுளை அடையலாம் என்பது மெய்யல்ல. சுத்த சன்மார்க்கம் உற்றால் தான் உண்மை அறியலாம், அடையலாம்.


ஆக்குலகு இல், ஞாபகம் இல், என்பவற்றின் ஈற்றில் வந்த ‘இல்’ என்பதற்கு இல்லை என்பது பொருளாம்.