Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.568.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பத்தேழாம் அதிகாரம்.

ஞாபக விசாரம்.


8

நாற்பாத யோகமே ஞாபகம் மற்றென்றால்

ஏற்ப பிரிதுய ரிங்கு.

568


குறள் விளக்கம்.


யோகம் என்பது சேர்ப்பது. நான்கு கால் ஒன்றாவது போல், ஞான-பக்தி-கரும-மஹாராஜயோகமே முழுயோகமாக, பூர்ணயோகமாகப் புரிந்து கொள்ள வேண்டும். இந்நானிலை கொண்ட முழுமுதல் யோகந்தான் இங்கு ஞாபக யோகமாக நவிலப்படுகின்றது. இவ் யோகத்தால் அன்றி பிறிது எதனாலும் கடவுள் நிலையை எய்துதல் கூடாது. மற்ற வகையால் பிரிவுத் துயரே உண்டாம்.


நாற்பாத யோகமென்றது சரியை, கிரியை, யோகம் கடந்த ஞானத்தில் யோகமாம். நாற்பாத யோகம் என்பதை நான்காவது பாதமாகிய ஞான பாதத்தில் யோகம் என விரித்து பொருள் கொள்ளல் வேண்டும். மற்றபடி யோக பாதத்தை மட்டும் குறிக்க வந்ததல்ல.