தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
ஐம்பத்தேழாம் அதிகாரம்.
ஞாபக விசாரம்.
|
7 |
மகரொளி மன்னுகம் மையம் பகமாய் மிகஞா பகமதின் மேவு. |
567 |
குறள் விளக்கம்.
இந்த ஞாபகத்தில் விசாரமுறுவதும், அனுபவ சித்தி பெறுவதும் காரணமாகவே, ஞாபகம் என்ற சொல்லும் அக உண்மை எல்லாம் கொண்டு விளங்கச் செய்யப்பட்டுள்ளதாம். எப்படி எனில், ம்-கம்-பகம்-ஞாபகம் என்பவைகளில், ம்-மகர ஒளியாம் கடவுட் ஜோதி. இது விளங்குமிடமே, கம் - (தலை) இத்தலையின் மையத்தில் பகர பீடத்தில் மன்னியுள்ளதுவே பகம் என்னும் பதி ஒளியாம். இவ்வொளியும் ஞானமாகிய நான்காம் நிலையில் சூழப்பட்டு விளங்கலால் ‘ஞா’ என்னும் மெய்ந்நிலை நான்காவதாம் (க்-ங்-ச்-ஞ்) எழுத்தோடு சேர்த்து ஞாபகமாக ஓதப்பட்டுள்ளதாம்.
ஆகவே சிரநடு ஜோதியினின்று நால்யோக சித்தியுடன் விளங்குவதுவே ஞாபகம் என்றறிய வேண்டும்.
Write a comment