Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.564.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.


ஐம்பத்தேழாம் அதிகாரம்

ஞாபக விசாரம்.


4

பத்தி யகமிருந்து பாரினில் வாழ்வுற

நித்திய மன்பா னெகிழ்.

564


குறள் விளக்கம்.


அகத்தே பெற்ற கடவுள் ஞான உணர்வை விடாது பற்றி நிற்கின்ற விசார நிலையே உண்மைக் கடவுள் பக்தியாக உள்ளது. மேலும் அப்பக்தி. அந்த அகத்திருந்து சதா அன்பினாலே நெகிழ்ந்து, அனகத்தே விரிந்து ஜீவர்கள் மீது செலுத்தப்படும் போதுதான் முழுமையான பக்தியாகின்றது.


ஆகவே, கடவுட் பற்றையும், ஜீவ தயவையும் தடை இன்றி ஓங்கச் செய்வது இந்த பக்தியாகும். இப்பக்தி யோகமே சத்விசாரத்தின் பயன் காட்டுவதாம்.