Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.561

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பத்தேழாம் அதிகாரம்

ஞாபக விசாரம்.

1.

அருளொளி ஞாபகம் ஆரிடும் உள்ளம்

மருவும் விசார மணம்.

561


குறள் விளக்கம்


முன்னதிகாரத்தில் குறித்த கடவுட் காட்சி உள்ளத்தினின்று மறையாது ஒளி விட்டு விளங்க உபாயமாக இந்த ஞாபக விசாரம் அமைவதால், அதற்கடுத்த அதிகாரமாக அமைக்கப்பட்டது. உள்ளத்தே அருட் ஜோதி நிரம்பியுள்ளதை நாம் நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து ஒன்றிய போது தான் சுத்த அருள் விசாரம் உள் மலர்ந்து மணக்கும். இவ்விசார மனம் தயவோடு, உயிரிலும், உடலிலும், உலகிலும் நிரம்பும்.


மற்றப்பற்ற நெஞ்சில் மறைப்பற்று நிற்கும் வள்ளல் அகத்தே மணந்து கொண்டு இன்பு செய்யவே இந்த விசாரம் நம்மில் தழைப்பதாகும்.