Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.557.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பத்தாறாம் அதிகாரம்.

கடவுட் காட்சி.


7

யோகசித்தர் காட்டும் உருவுலக மியாவுமே

மோகமறு காட்சியா மோ.

557

குறள் விளக்கம்

கன்ம சித்தர்கள் ஒருமை மனச்சக்தியினால், காண்பதற்கு அரிய உருவுலக விஸ்வரூபக் காட்சியை

எல்லாம் காட்டக் கூடும். இவற்றால் ஆச்சரியமும், மனப்பிரமையும் உண்டாவன. அன்றி, ஜீவ தயவும்

ஆன்ம ஞானமும், நிர் அதிசய ஆனந்தமும் உண்டாவதில்லை. ஆகையால், சத்விசாரத்தால்

உண்ணின்று தயை வளர உலகத்தை நோக்குதல் வேண்டும்.