தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
ஐம்பத்தாறாம் அதிகாரம்.
கடவுட் காட்சி.
|
5 |
அருவநிலை யாண்டவரே அற்புதமாய்ச் சூழும் உருவிருந் தூட்டுமெய் யோம்பு. |
555 |
குறள் விளக்கம்
கடவுள் அருவாகிய அகத்திலேயிருந்து கொண்டு உலகெல்லாம் ஆளுகின்றார். அவரது அருளாணைக்கு ஒப்பவே சூழ்நிலை வடிவங்களில் தயா தெய்வ சக்தி, காட்சியும் அனுபவமும் வழங்க வருகின்றதாம்.
ஆதலின், அந்த மெய்ப் பொருளனுபவத்தைப் பேணிப் பெறுவதற்கு, நாமும் அச்சூழ வருவனவற்றில் நம் கடவுள் வியாபகக் காட்சியைக் கண்டு, அன்பு செய்ய வேண்டியுள்ளோம்.
ஓம்பு = விரும்பிப் பேணு.
Write a comment