தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
ஐம்பத்தாறாம் அதிகாரம்.
கடவுட் காட்சி.
|
4 |
குருதெய்வ மூர்த்தியெலாம் கோவி னுருவோ அருட்பணிக்கே யண்டவ ரை. |
554 |
குறள் விளக்கம்
குருவென்றும். தெய்வமென்றும், மற்றப் பெரியவர்கள் என்றும் உள்ளவர்கள் எல்லாம், அவரவர் பக்குவத்திற்கேற்ற ஏகதேச அருள் கொண்டு விளங்குபவர்களாவர். அவர்களை அண்டி, அன்பும் அறிவும் விளையும் அருட்பணிக்கே நம்மை ஆளக்கிக் கொள்ள வேண்டுமேயன்றி, அவர்களையே கடவுளென மதித்து, விசாரமில்லாது சூழ்ந்து உண்மையை மறந்து விடக்கூடாது.
கடவுட் பூரண சக்தி நம்மில் மலர்ந்து, அருள்மயம் ஆவதொன்றே நம்முடைய குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்.
Write a comment