Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.549.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பத்தைந்தாம் அதிகாரம்.


9

பால்வினைத் தெய்வம் படைத்துள்ள ஓர்கடவுள்

மால்கருணை வள்ளல் மதி.

549


குறள் விளக்கம்.


தனிப்பெருங்கருணை வள்ளலாகிய நம்பதி ஒருவரே போற்றிப் புகழத்தக்க பெருமை எல்லாம் கொண்டுள்ளார். ஏனெனில், அவருடைய பெருந்தயவாலே சூழ்நிலையாவும் காரியப்படுகின்றன. அவரது தயவைப் பூரணமாகப் பெற்றுக் கொண்டால், சூழ்நிலைக்குத் தலைவணங்காது, அதனை ஆளலாம். ஆண்டவரோடு கூடி வாழலாம். பதி தயவீன்ற புறச் சூழ்நிலை மூவிதமாகத் தோன்றியுள்ளதாம். அவை பால், வினை, தெய்வம் எனப்படும்.


இவற்றில் பால் – என்பது ஓர் ஆன்மாவுக்கு அகத்தில் விளையும் அறிவு ஒளியாம். வினையாவது, அவ்வான்மாவுக்கு அகப்புறம் நிகழும் ஜீவ கரணேந்திரியச் செயல் என்ப. தெய்வம் என்றது புறத்தே சூழுகின்ற ஐம்பூதப் பிரபஞ்சமும், செயலுமாம்.


மால்கருணை = பெருங்கருணை.

தினம் ஒரு தயவுக்குறள் எண்.493

தினம் ஒரு தயவுக்குறள் எண்.493