<<
Upcoming Events
Space Directory
Web Albums
Documents Download
Audio
Radio
Search in ThiruArutpa
Print
Post your comment

தினம் ஒரு தயவுக்குறள் எண்.547.


posted 18 months ago
25 Jul 2010 03:11:08 GMT 3:11:08 AM

1568 views

                                                                                                                                                                           தயவுக்குறள்.


சுவாமி  சரவணானந்தா.


ஐம்பத்தைந்தாம் அதிகாரம்.


விசாரமும் சூழ்நிலையும்.


 











7



அருளுருவு மைஞ்செயலும் ஆண்டவர் கொண்டென்றும்


திருநடஞ் செய்தற் றெளி.



547



 


குறள் விளக்கம்.



    அருட்ஜோதியே தனது வடிவாய்க் கொண்டு, ஐந்தொழிலே தனது செயலாய்க் கொண்டு விளங்குபவர் நம் பதி. இந்த உண்மையைக் கண்டு கொள்ள சத்விசாரமும், அப்பதியின் அருளைப் பெற்று உலகோடு ஒத்து வாழற்கான சுத்த தயவும் நாம் கொண்டு உய்யவே நம் தயா ஜோதி பதியின் திருநடனம் விளங்குகின்றதாம்.

Tags:
Print
Post your comment
newest
oldest
post a comment
#1
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

சுத்த தயவு- சுத்த சன்மார்க்கம் என்று பொருள் கொண்ட குறள்.

சுத்த தயவின்மையால் நாளுக்குநாள் துன்பத்தை எதிர்க்கொள்ள வேண்டியிருக்கிறது. சுத்த தயவை அறிய முடியாமலும், சுத்த தயவை விருத்தி செய்ய முடியாமலும் போக வாழ்க்கை என்கிற மாயை திரை தடுத்து வருகிறது.

மாயையின் பிடியில் சிக்கி தவிக்கும் மக்களின் வேண்டுதலும் உலக மாயையை நோக்கி செல்வதால் அருட்ஜோதியை மக்கள் உணர முடியாமல் திணறுகின்றனர்.

நாளுக்குநாள் ஒவ்வொரு உயிருக்கும் துன்பம் விளைவிக்கும் மனிதன், சுத்த தயவில்லாமல் இறைவனைத் தேடி அலைகிறான். எல்லா உயிர்களையும் இறையாக பார்க்கும் குணம் சுத்த தயவு எனலாம்.

எனவே எல்லாம் வல்ல சிதம்பரம் ராமலிங்க சுவாமிகள் அனைவருக்கும் பக்குவம் வருவித்து அன்புருவாக வாழ துணை புரிவாராக!
kumaresan krishnamurthy

04 Aug 2010 06:24:26 GMT 6:24:26 AM
18 months ago

Login
Login to post your comments
-
☎: -
-


Dindigul, Tamil Nadu, India-624001
Home
Documents
Audios
Photo Albums
தயவுக் குறள்

All the contents including articles, documents, audio and video on this Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா website is copyrighted and owner of this content. Everything on this website is for everyone free to use, distribute, email it, educational use, view, print, present, download as many times as you want but hosting in another website or making changes to the authors content, audio or documents and video without permission is prohibited.

Powered by VallalarSpace