Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.546.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பத்தைந்தாம் அதிகாரம்.

விசாரமும் சூழ்நிலையும்.

6

ஒருவராங் கோவே யுலவா திருக்க

உருவுல கியாவுமியா தோரு

546

குறள் விளக்கம்.

ஒருவரே ஒப்பற்ற தனித்தலைமைக் கடவுள், அவர்தானே, அகத்தில் எக்காலும் அழியாதிருக்கவும், புறத்தே அவரைச் சூழ்ந்து அணுமுதல் அண்டாண்டம் வரை எத்தனை எத்தனையோ உருவங்களும், செயல்களும் தோன்றித் தோன்றி மறைகின்றன.

இவ்வகையான அழிகின்ற சூழ்நிலைகளுக்குக் காரணம் என்னவென்று சத்விசாரம் செய்து காணும்போது, கடவுள் ஞான ஆனந்த நிலை வெளிப்பட்டு அனுபவம் வழங்கற்கே என்று அறியலாகும்.