Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.545.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பத்தைந்தாம் அதிகாரம்.

விசாரமும் சூழ்நிலையும்.

5

ஊரா மிலக்க உடன்குருட் டாமிலைத்தாங்

கோரார் கடவுளை யுள்.

545

குறள் விளக்கம்.

ஒரு பசு ஏதோ ஒன்றைக் கண்டு கத்துகின்றது. பின்னர் காரணத்தைக் கண்டறியாத குருட்டுப் பசுவும் கத்துகின்றது. இது போன்றுதான் கடவுளைக் கண்டுணர்ந்த வல்லவன் சொன்ன வார்த்தையைப் பிறர் அகமுணராது மொழிந்து கொண்டிருப்பதுமாம்.

கடவுளை அகத்தே ஓர்ந்து உணரத்தான் சத்விசாரம் செய்யப்படுகின்றது. இவ்விசாரத்தினால் அருளுண்டாகி, அஞ்ஞானக் குருடு நீங்கி மெய்ஞ்ஞானக் கண் திறக்கப் பெறுகின்றதாம்.

மிலைத்தல் = கத்துதல், கனைத்தல்.