தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
ஐம்பத்தைந்தாம் அதிகாரம்.
விசாரமும் சூழ்நிலையும்.
|
4 |
கண்டன வெல்லாங் கடவுள் எனக்கருதித் தெண்டனிடல் பொய்சேர் திருக்கு. |
544 |
குறள் விளக்கம்.
உள்ளத்து உள்ளாக ஒன்றியுள்ளது கடவுள். இந்த உண்மையை திருக்கற (குற்றமற, மாறுபாடில்லாது, அருளனுபவத்தால்) உணர்தல் வேண்டும். இவ்வக ஞானம் வளரவே சூழ்நிலையாவும் வழங்கப் படுகின்றோம். ஆதலால் சூழ வருவோர்க்குத் தயவு செய்தல் வேண்டும்.
இதுவல்லாது, மாறுபடக்கண்டு வெறுத்து விலகலும், விரும்பித் தேவதா பக்தியுடன் பணிந்து தெண்டனிடலும் அறிவுடைமை ஆகாது.
கண்டனவெல்லாம் கடவுளாகாது. கரணேந்திரியக் காட்சிக்கு அப்பாலாய சச்சிதானந்தமாய் அயலறியாது தன்மயமாய் உள்ளதே கடவுள் ஆகும்.