தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
ஐம்பத்து மூன்றாம் அதிகாரம்.
ஐம்பத்து நான்காம் அதிகாரம்.
சோதிச் சின்னம்.
|
9 |
பிறைசுக்கை யாதி பிறச்சின்ன மெல்லாம் இறைஜோதி காண விடு. |
539 |
குறள் விளக்கம்.
மதிப்பிறையும், நட்சத்திரமும் அகத்திலங்கும் ஆன்ம கடவுட் ஜோதி உண்மையைக் காட்டவே வந்தன. இவ்வக நிலலயைச் சுட்ட கற்பிக்கப்பட்ட மதச் சின்னங்கள் எல்லாம் அகப்புறமாகிய நெற்றி நடு அணிதல் அல்லது பாவித்தல் எதற்கெனின், மன ஓர்மை உண்டாகி நுதற்கண் திறக்கப்பெற்று உள்ளொளியைக் காண்பதற்காகவே என்க.
விசார உண்மை அறியாது, விபூதி, குங்குமம், திருமண், சந்தனம் முதலியவற்றால் மதச் சின்னங்கள் அணிவதால் மெய்யருள் விளங்குமோ ?
தேக இந்திரிய, கரண சுத்திக்காக யோக ஞான சித்தர்கள் கற்பித்தவைகளே எல்லா மதச் சின்னங்களும், இச்சின்னங்கள் இடுதல் கடவுட் ஜோதியைக் கண்டு கொள்ளற்கே என்று அறிதல் வேண்டும்.